Saturday, April 30, 2022

நாட்கள் நகராதோ

          

நேரம் தேயாதோ - விரைவில்  
நாட்கள் நகராதோ - தொலைவில்
நீ இருந்தும் எனை தொல்லை செய்கிறாய்
                 
 - திலீபன் -

Monday, June 24, 2019

கடைசி முத்தம்


அவள்  தந்த  கடைசி

முத்தமும் அதன் சத்தமும்

இன்னும் எந்தன் காதருகே..!!

- திலீபன் -


Friday, April 5, 2019

கண்களை பார்


கண்களை பார்
கவிதை வரும் என்பாள்..

பார்த்து விடாதே
சுவாசம் கூட நின்றுவிடும்..

அவள் பார்வையே
உன்னை கொன்று விடும்..

இதில் எங்கிருந்து
கம்பர்போல் கவிதை வரும்..

** திலீபன் **

Wednesday, December 5, 2018

மீண்டும் ஓர் பிறவி




மீண்டும்  ஓர்  பிறவி  வேண்டும் 

அதிலும்  தீண்டும்  

உன்  விரல்கள்  வேண்டும் 

**திலீபன்** 



Wednesday, November 14, 2018

காந்த விசை கண்கள்


காந்த விசை கண்கள் 

ஒளி வீசும் பற்கள் 

தேன் சொட்டும் உதடுகள் 

சங்கென மிளிரும் கழுத்து 

மெருகேற்றிய மெல்லிடை 

மென்மையான சின்ன நடை 

எனக்கு உன் மெய் அழகு - ஆனால் 

கவிதைக்கு பொய் அழகு..!!

**திலீபன்**

கைவிரல் தீண்டையில்


என் கைவிரல் தீண்டையில் 

உன் பூவிதழ் மேனி புண் படுமோ

 என்கின்ற பயத்தில் தான் - உன்னை 

தொடாமல் தள்ளிநின்று தாகம் தீர்க்கிறேன் 

**திலீபன்**


Saturday, November 10, 2018

அடைமழை நேரத்தில்


அடைமழை  நேரத்தில்

அணைத்திட  ஆசையில்லை

குடை  பிடித்து  கூடவா

இடைபிடித்து நடக்க ஆசை


* திலீபன் *

நாட்கள் நகராதோ

           நேரம் தேயாதோ - விரைவில்     நாட்கள் நகராதோ - தொலைவில் நீ இருந்தும்  எனை  தொல்லை  செய்கிறாய்                         - திலீபன் -